அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு என ஈரான் அரசு கூறியுள்ளது. மனசாட்சி அல்லது விலைவாசி உயர்வு ஆகியவற்றால் போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என ஈரானின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் பதிவிட்டுள்ளார்.
