செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட தொல்லியலாளர் அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவை நோய் தொற்றிற்குள்ளாhனவர்களினது என தெரிவித்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
தீவுகள் ஆராயுங்கள்
இந்நிலையில் தொல்லியலாளர் சோமதேவாவின் அறிக்கையை நிராகரி;த்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நீதியை வலியுறுத்தி, எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
