220kV மின் பரிமாற்ற வழித்தடத்தை மாற்றியமைக்கும் (Reconductoring) பணிகள் காரணமாக, வடமாகாணத்திற்கான மின்சார விநியோகத்தில் தற்காலிக தடங்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 02.10.2026 வெள்ளிக்கிழமை – மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
- 03.10.2026 சனிக்கிழமை – மதியம் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இந்த நேரங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
