சமர்வீரன்புதன், நவம்பர் 25, 20267 நிமிட வாசிப்பு

“பிரபாகரன் ”
தமிழீழ வீரத்தின் ஆணிவேர்
தன்மானம் ஊட்டி வளர்த்த தாய் !
குனிந்த தமிழரை நிமிரவைத்த
முதுகெலும்பு !
அஞ்சாமையை புகட்டிய தந்தை !
அறத்தில் நிமிர்ந்த ஆளுமை !
எங்கள் தலைவனுக்கு
அகவை எழுபத்திரெண்டாம்
நெஞ்சார வாழ்த்துவோம்
வானுயரக் கவிபாடி
தமிழீழ போர் வகுத்த
வில்லாளன் !
புதுமை புகுத்தி
பரணி பாடிய விவேகி !
கூர்மை கொண்ட பார்வையால்
சுட்டெரிக்கும் நெருப்பு !
போற்றுவோம் பெருமை பொங்க !
வாழ்த்துவோம் நெஞ்சம் ஒங்க !
போர் வியூகம் வகுக்கும்
போர் ஞானி !
பாரின் இமை வியக்கும்
அறிவொளி !
தமிழர் இருள் அகற்ற வந்த
கதிரொளி
பாடுவோம் செந்தமிழ் பண்ணெடுத்து
ஆடுவோம் நவரச பாவம் காட்டி !
இறுங்கா மனம் கொண்ட உறுதி
அடங்கா திடம் கொண்ட தலைவன் !
அடிபணியா உரம் கொண்ட வேங்கை !
ஏற்றுவோம் நெஞ்சில் அவன் மனதை !
காட்டுவோம் விடியலில் அவன் கதிரை !
இயற்கையை நேசிக்கும் தாயுள்ளம்
பறவைகளின் தாய்மையை மதிக்கும் பேரன்பு
எதிரிகளின் தாய்மையின் கண்ணீரை
துடைக்கும் மனிதம் !
விலை போகா விவேகம்
வேங்கைகளின் தன்மானம் !
செல்லுவோம் அவன் விழிவழியில்
புகழுவோம் அவன் தலைமை தன்னை !
பகைவரே மதிக்கும் பேராளன் !
கருணையே நிறைந்த பண்பாளன் !
காத்திடும் காரமான காப்பாளன் !
அன்பினை பொழிந்தே பெருமை
கொள்வோம்
தென்பினில் ஆடி மகிழ்ச்சி
கொள்வோம் !
விண்கலம் எய்த தமிழர் தலைவன் !
முப்படை வகுத்த போர்க் கலைஞன் !
மதிநுட்பம் கொண்ட போராளி !
உவகை கொள்ள வாழ்த்துவோம் !
பெருமை கொண்டு போற்றுவோம் !
தமிழினத்தின் காவலன் !
தாரணி போற்றும் வித்தகன் !
காலம் தந்த கொடையவன் !
புகழ்மாலை சூடியே வாழ்த்துவோம் !
அகமகிந்ததே போற்றுவோம் !
கார்த்திகை மாதத் தவமே !
பார்வதித்த தாயின் அறமே !
பாரது போற்றும் மறமே !
நின் அறம் வெல்லும் !
நின் புகழ் ஓங்கும் !
நின் நிலம் மீளும் !
வாழ்த்துவோம் தமிழ் பறை சாற்றி !
வாழ்த்துவோம் தமிழ் மறை ஓதி !
