யாழ்ப்பாணத்தில் நண்பர்களான இரு இளைஞர்களுக்கு இடையிலான வாய்த்தர்க்கம் கத்திரிக்கோல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்செழு பகுதியை சேர்ந்த நண்பர்களான இரு இளைஞர்களுக்கு இடையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தார்க்கம் முற்றி , இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டதை அடுத்து , ஒருவர் மற்றையவர் மீது கத்திரிக்கோலினால் சரமாரியாக குத்தியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அச்செழு பகுதியை சேர்ந்த மேனன் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்த நிலையில், தாக்குதலாளியான இளைஞனை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
