2026 நவம்பர் 01ம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கீழுள்ள நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம்
- எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கணக்கு ஒன்றைத் திறத்தல்.
- கட்டிட வரைவிடு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்.
- மோட்டார் வாகனத்தினை பதிவு செய்தல், அதற்கான அனுமதி பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்.
- காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.
இதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணைய சேவை மூலம் விண்ணப்பிக்க முடியும்.
