ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட FP-7 தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணையை முதன்முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தியுள்ளது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிட்ட பதிவில், “உக்ரைனின் தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணை FP-7. முதல் போர்ப் பயன்பாடு” என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டதுடன், அடுத்த கட்டமாக அதன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பிலும் தெரிவித்துள்ளார்.
