ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்த நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு மேலாகப் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானியப் படைகள் தெரிவித்துள்ளன.
ஈரானின் அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான IRIB வெளியிட்ட தகவலின்படி, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) புதிய வான் பாதுகாப்பு அமைப்பு, சனிக்கிழமையன்று MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்துத் தாக்கி வீழ்த்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் போர் ஆரம்பித்ததிலிருந்து ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 58ஆவது ஆளில்லா விமானம் இதுவெனவும் IRIB தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார அழுத்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
புவியியல் காண்
