யேர்மனி ஓபர்கவுசன் (Oberhausen) நகரில் உள்ள ஒரு பிரம்மாண்டமான மண்டபத்தில் “தமிழ் ஸ்டார் கலைமாலை 2026” மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
நம் கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வு, இந்த ஆண்டும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
- “எம்மவர் கலைவழங்களை வளர்க்கும் நோக்கத்தில் பலர் எம்மவர் திறன்களுக்குக் களம் அமைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ஸ்டார் இசைக்குழுவின் ‘கலைமாலை’ என்னும் பெயரில் பல ஆண்டுகளாக இப்பணி செய்யப்பட்டுவருகிறது.”பல திறன்மிக்க பாடகர், பாடகியர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெறவுள்ளது.
- பல்சுவை நடனங்கள்: அரங்கைக் கவரும் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள்.
- அதிர்ஷ்ட லாபச் சீட்டு (Lucky Draw): இந்நிகழ்வில் விற்கப்படும் அதிர்ஷ்ட லாபச் சீட்டு மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி, இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு (பள்ளிகளுக்கு) நற்பணித் உதவியாக வழங்கப்படவுள்ளது.
நிகழ்வு விவரங்கள்:
- திகதி: 24.10.2026
- நேரம்: மாலை 3:00 மணி
- இடம்: Rombacher Str. 17, 46049 Oberhausen, ஜெர்மனி
நமது கலைப் பயணத்திற்கும் சமூக சேவைக்கும் உங்களது ஆக்கமும் ஊக்கமும் மிகவும் அவசியமானது. எனவே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
ஒழுங்கமைப்பாளர்கள்:
- திரு. எமிலியான் (பட்டு) மற்றும் திரு. உதயன், அவர்தம் குழுவினர்.
தொடர்புகளுக்கு: (தொடர்பு எண்(எமிலியான் 0049 1515 4882692)
(திரு. உதயன்0049 174 3700928)
முக்கிய குறிப்பு:
- நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம்! (Free Event)
