நீதிமன்ற உத்தரவின் பேரில் கிரான்குளம் இந்து மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சர்வேஸ்வரன் கஜேந்தினியின் சடலத்தின் எஞ்சிய பாகங்கள் நேற்று வியாழக்கிழமை (8) மாலை மீண்டும் புதைக்கப்பட்டன.செய்திகளைப் படி
குறித்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலத்தின் எலும்புத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, பரிசோதனைக்காகப் பெறப்பட்ட எலும்புத் தொகுதி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சடலத்தின் எஞ்சிய பகுதிகள் கிரான்குளம் மயானத்திலிருந்து மீண்டும் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சட்ட வைத்திய அதிகாரியினால் பெறப்பட்டுள்ள எலும்பு தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணத்துக்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
