யுக்ரைனின் டினிப்ரோ (Dnipro) நகரிலுள்ள தொடருந்து நிலைய நடைமேடையை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (29.10.2026) இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
