அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கும் ஈரான் முன்னெப்போதையும் விட அதிகளவில் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா காட்டும் விருப்பத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
