ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பில் எதனையும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரானிடம் உள்ள 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மூன்றாவது நாடொன்றுக்கு மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவை தெஹ்ரான் நிராகரித்துள்ளதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற்று சேமித்து வைக்க ரஷ்யா முன்வந்திருந்த போதிலும், ஈரானின் யுரேனியக் கையிருப்பை நாட்டிற்கு வெளியே மாற்றும் யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரெசாய் குறிப்பிட்டார்.புவியியல் காண்
எனினும், யுரேனியத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச கண்காணிப்பின் கீழ் அதன் செறிவூட்டல் அளவைக் குறைக்கும் வகையில் நீர்த்துப்போகச் செய்வதற்கு ஈரான் முழுமையான எதிர்ப்பை வெளியிடவில்லை.
