கஸ்ஸப தேரர் உட்பட மேலும் இரு பிக்குகள், அனுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரம் புனித நகரத்துக்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டரீதியான அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத வனவாசி பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்குத் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் 14 எதிரிகளில் 2 ஆவது எதிரியாகப் பெயரிடப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் இன்றைய தினம் மன்றில் சமூகமளிக்கவில்லை. அதனையடுத்து அவருக்கு எதிராக நீதவான் பிடியாணை விடுத்துக் கட்டளையிட்டார்.
அத்துடன் வழக்கினை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
