இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 2,11,666 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதில் செப்டம்பர் மாதத்திலேயே அதிகபட்சமாக 29,752 பேர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், முதல் எட்டு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றமாக 6,131 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
