உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைத் தற்போதைய அரசாங்கம் நன்கு அறியும் எனவும் மற்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் எதிர்க்கட்சியினரின் தவறான வழிநடத்தும் கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
