வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழமுக்கம் அக்வான் புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இப்புயல், வரும் 20 ஆம் திகதி நெல்லூர் – துனி இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
