ஹோர்முஸ் நீரிணையில் வழிசெலுத்தல் கருவிகளை அணைத்துவிட்டு தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் சென்ற நான்காவது எண்ணெய் தாங்கிக் கப்பலும் கடற்கண்ணியில் மோதித் தீப்பிடித்துள்ளதாக ஈரான் கடற்படை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 24 மணி நேரத்தில் நான்கு கப்பல்கள் சேதமடைந்துள்ள நிலையில், கடல்சார் விதிகளைக் கடைப்பிடிக்குமாறு ஈரான் கடற்படை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
