தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மாரிட்ஸ்பர்க் மற்றும் பிரிட்டோரியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதகடிப்படையில் வாகனமொன்றில் எட்டு ஆண்களும் குடிசையொன்றில் ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
