மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இரங்கல் கடிதமொன்றை வெளியிட்டு பேரவை இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டும் மற்றும் வடக்கு மாகாண சபையில் தமிழின அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்றும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை அவர் குரல் கொடுத்ததாக பேரவை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
