ஆயுதப் பராமரிப்பு மற்றும் இராணுவப் பயிற்சிகளுக்காகத் தமது வீரர்களை அவ்வப்போது உக்ரைனுக்கு அனுப்பி வருவதை பிரான்ஸ் அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் தமது துருப்புக்கள் நேரடிப் போரில் ஈடுபடவில்லை என பிரான்ஸ் தெளிவுபடுத்தியுள்ள போதிலும் இது போரில் ஐரோப்பாவின் நேரடித் தலையீட்டிற்குச் சமமானது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
