By Jaso3 மணி நேரம் முன்
கொழும்பு 3, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (21) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இந்த சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
