மாவீரர் வாரம் இன்று (21.11.2026) ஆரம்பமாகியுள்ள நிலையில், தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, மாவீரர் துயிலுமில்லத்தை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்ட உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தற்போது கொழும்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் இருந்தவாறே மாவீரர் வாரத்தின் முதல் நாளில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
