ஈரானில் 19 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், ‘கௌரவக் கொலை’ என்று கருதப்படும் சம்பவத்தில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹெலியா ஃபத்தாஹி என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஒரு இளைஞருடன் கொண்டிருந்த உறவின் விளைவாக இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தத் தகவலை அவர் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், அவரை சுமார் 30 வலிப்பு எதிர்ப்பு மாத்திரைகளை விழுங்கச் செய்து, கடுமையாகத் தாக்கியதுடன், தலையணையால் மூச்சுத்திணறச் செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.
தனது மகளைக் கொன்ற குற்றச்சாட்டில் கொலையை ஒப்புக்கொண்ட வோரியா ஃபத்தாஹி மற்றும் லெய்லா வெய்ஸ் ஆகிய பெற்றோர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
