அக்கரைப்பற்று பனங்காட்டு மண்ணின் முதல் பெண் வைத்தியர் எனும் பெருமையை ரவிச்சந்திரன் அபிநயா அவர்கள் நிலைநாட்டியுள்ளார்.
அக்கரைப்பற்று பனங்காடு கிராமத்தை சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ரவிச்சந்திரன் மற்றும் புஸ்பாதேவி தம்பதிகளின் புதல்வியான செல்வி அபிநயா அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் முதலாம் தரம் முதல் கல்வி கற்று உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மருத்துவ இளங்கலை மற்றும் அறுவைச்சிகிச்சை இளங்கலை (Bachelor of Medicine bachelor of Surgery )(MBBS) வைத்தியராக பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். இவரது சேவை சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்.
தகவல் ஊடகவியலாளர் Sugirthakumar Vijayarajah அவர்களது பதிவிலிருந்து, நன்றி.
