
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து 390 லீற்றர் டீசலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
