சித்திரை புத்தாண்டு கவிதை
சத்தியத்தை சாவடிக்க… சமரசத்தை சிதறடிக்க… வித்தைகளை கற்று – இந்தப்
புவி யுத்த களமாக்கி நிற்பவர் மத்தியிலே,
உத்தமரை காத்து – புது ஒளிபரப்ப இத்தரையில் வந்து உதித்த சித்திரை புத்தாண்டே!
தத்துவங்கள் விதைத்த – எங்கள்
முத்தமிழ் வகுத்த அற்புதமே!
சர்க்கரைப் பொங்கலிட்டு – உன்
வரவை சங்கமமாய் வரவேற்கிறோம்!
பக்தரின் குறைகள் களைவாய் பராபவ வருடமே!
கற்றவர் வியந்திட – மற்றவர் மகிழ்ந்திட,
குற்றங்கள் நீக்கி – தமிழை
குவலையத்தில் வாழ வைப்பாய்!
சித்திரை புத்தாண்டே… உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!
முது பெரும் கவிஞர் முல்லை மாயவதாசன்