மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படுவதாகவும், முறைப்பாடுகள் உரிய முறையில் ஏற்கப்படவில்லை என்றும் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு
02.07.2026 –
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பண்ணையாளர்களின் கூற்றுப்படி, 30.06.2026 அன்று அப்பகுதிக்குச் சென்ற சில அயல் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளுடன் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும், அவர்கள் கத்திகளுடன் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்வதற்காக மயிலத்தமடு பண்ணையாளர்கள் சிலர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
