எகிப்தில் தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே அல்-அயாத் பகுதியில் இரண்டு பயணிகள் தொடருந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 110 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதையில் நின்று கொண்டிருந்த தொடருந்து மீது மற்றொரு தொடருந்து அதிவேகமாக மோதியதால் சில பெட்டிகள் தடம் புரண்டன. எகிப்து ஜனாதிபதி அல்-சிசி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
