அமெரிக்காவில் ஏற்பட்ட தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்காவின் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகமான (FAA) அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்தத் திடீர் தடையால் அமெரிக்காவின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் பாதிக்கப்பட்டன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான FAA, தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தடங்கலே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளது. கோளாறைக் கண்டறிந்து சரிசெய்வதற்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விமானங்கள் காண்க
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightAware தளத்தின் தகவலின்படி, 3,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவிற்குள் வருகை தரும், அங்கிருந்து புறப்படும் மற்றும் உள்நாட்டில் பயணிக்கும் 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளன.
இதற்கிடையில், உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களிலிருந்து சுமார் 11,000 விமானங்கள் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாக விமானப் போக்குவரத்துப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பல விமானங்கள் இரத்துச் செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து எப்போது வழமைக்குத் திரும்பும் என்பது குறித்து FAA உடனடியாகத் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்தச் சம்பவத்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். விமான நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளதுடன், பயணத் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறுக்கான முழுமையான காரணம் மற்றும் விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பும் நேரம் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
