ஈரான் மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதுடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவியையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இரண்டு விடயங்களையும் தமது முதன்மையான அரசியல் முன்னுரிமைகளாகக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
