பிரித்தானியாவில் வருடாந்திரப் பணவீக்க வீதம் ஒக்டோபர் மாதத்தில் 3.6 சதவீதமாக உயர்ந்து கடந்த ஓராண்டில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியால் எரிபொருள் விலைகள் உயர்ந்தமையே இதற்குக் காரணமாகும். இதனால் இங்கிலாந்து மத்திய வங்கி டிசம்பர் மாதத்திலும் வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
