ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ரஷ்யா ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். எனினும், ஐரோப்பாவுடன் போர் ஏற்படுமானால் அதனை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அத்தகைய போரைத் தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
