மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசம் மூன்றாம் கட்டை மக்கள் தமக்கான குடி நீர் இன்றி சிரமப்படுவ தாக கூறுகின்றனர்.
இன்றைய தினம் உத்தியேகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வாகரை மூன்றாம் கட்டை பிரதேச மக்களுடனான குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிவதற்காக உத்தியோக பூர்வ விஜயம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
சந்திப்பின் போது அவர்கள் கூறியதாவது பின்வருமாறு.
தாங்கள் 21 குடும்பங்க ளைச் சேர்ந்த 52 பேர் அந்த இடத்தில் வாழ்ந் து வருவதாகவும்.தமது வாழ்வாதார தொழிலா க குளத்தில் மீன் பிடிப்பது
காட்டில் தேன் எடுப்பது
மழைக் காலங்களில் விவசாயம் செய்வது.மற்றும் காட்டில் காய்க்கும் பழங்களைப் பறித்து விற்பது பேன்ற தொழில்களை செய்து வருவதாக தெரிவிக்கி ன்றனர்.
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடாத்தி வரும் வேளையில் காட்டு யானைகளின் பிரசண்ணமும் தமக்கு அச்சுறு த்தலாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலை யில் தாங்கள் தேன் எடு க்கச் செல்லும்போது வனஜீவராசிகள் தினைக்களத்தினர் கைது செய்து நீதிமன் றம் அழைத்துச் செல்வ தன் மூலம் அபராகங்களும் அடிக்கடி கட்டுவதாக விசனம் தெரிவிக்கின் றனர்.
சென்ற வருடத்தில் கூட தங்களது இருப்பிடங்களுக்கு வருகைதந்த வன இலா காதினைக்களத்தினர் மூன்று குடிசைகளை தீயிட்டு கொழுத்தியதா கவும் கூறி கவலையுற் றனர்.
பழங்குடி மக்களாகிய தமக்கு தமது பாரம்பரி ய தொழில்களைக் கூட செய்வதற்கு அதிகாரிக ள் தடைகளை ஏற்படுத் துவதாக கூறி வேத னைப்பட்டனர்.
இந் நிலையில் தாம் வாழ்வதற்கான அடிப்ப டை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் குடிப் பதற்காகவேனும் ஒரு கிணற்றினைக் கட்டித் தருமாறு தமது கோரிக் கையினை முன் வைக்கின்றனர்.
தகவல்
ச. சிவயோகநாதன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்.
06.07.2024
