சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த சீன முதலீடுகளை அசீம் முனீர் உள்ளிட்ட பாகிஸ்தான் இராணுவம் இடைநடுவில் தடுத்து நிறுத்தி வருவதாக அந்நாட்டில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக திங்கட்கிழமை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
