சென்னை: ‘சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்’ என சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்.
புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.
உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள். கனவுகள் நனவாகட்டும். சாதனைகள் தொடரட்டும்.’ எனத் தெரிவித்தார்.
