யாழ்ப்பாணத்தின் வேலணை செட்டிபுலம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் என இரு வயோதிபர்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தகவலையடுத்து இலங்கை காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கு அழுகிய மற்றும் உருக்குலைந்த நிலையில் இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.
தீவுகள் ஆராயுங்கள்
உயிரிழந்தவர்கள் 73 மற்றும் 74 வயதுடைய வயோதிப ஆண் மற்றும் பெண் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் உயிரிழப்பு எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான காலப்பகுதியோ இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளையும், தடயவியல் ஆய்வுகளையும்; காவற்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
