தியாகதீபம் திலீபனை நினைவேந்தும் தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியான நினைவேந்தல் நடவடிக்கைகள் கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
