வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி இன்று மாலை நல்லூர் கிட்டு பூங்காவில் ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்றியதுடன் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார்.
