நேட்டோஇராணுவக் கூட்டணியில் இணைவதற்கு ஈடாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து படைகளைத் திரும்பப் பெறுமா என அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் வினவியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கத் தரப்பினர் இந்தக் கேள்வியை எழுப்பியதாக, செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
