மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒரு சாரதியின் பொறுப்பற்ற செயல் நேற்றிரவு 08.15 மணிக்கு அழகான ஒரு குடும்பத்தைச் சிதைத்து விட்டது.
பொருளாதார ரீதியில் வறுமையான குடும்பம் இது.
சாவகச்சேரி பொலிஸ் நிலையச் சந்தியில் சிறியதொரு தேநீர்க் கடை ஆஹா ஓஹோவென வியாபாரமில்லை.
செ.செல்வராஜுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆண் பிள்ளை வரம் கேட்டு கந்தசஸ்டி விரதமிருந்தார்.
பதினொரு வருடம் பின்பாக பிறந்த டிசாந்த் எனும் ஒன்பது வயதுச் சிறுவனே இறந்துள்ளான்.
இவர் தனது பிள்ளைகளை ஏற்றியிறக்க கடன்பட்டு அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கினார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையச் சந்தியிலிருந்து வடக்காகக் கனகன்புளியடிச் சந்தி செல்லும் வீதியில் அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் வீடு.
வெறுமனே அனுதாபம் சொல்லாமல் தனமும் நல்ல மனமும் உடையவர்கள் ஆதரியுங்கள்.
