வடமராட்சிக் கிழக்கு, தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டியும் கப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
