ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட க்ரூஸ் ஏவுகணையைச் சவூதி அரபு கூட்டுப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தநிலையில் முன்னதாக விமான நிலையத்தின் நான்காவது பயணிகள் முனையத்தில் எறிபொருள் விழுந்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டாமென ஹூதிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
