ரஷ்யாவுடனான போரில் ஒக்டோபர் மாதத்தில் 54,400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவோ அல்லது படுகாயமடைந்ததாகவோ உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் , போர் தொடங்கியதிலிருந்து இதுவே மிக அதிகமான மாதாந்திர எண்ணிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 21 அன்று ரஷ்யப் படைகள் 2,250 உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும், இது தினசரி இழப்புகளில் ஒரு சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
