1,270 பிரிகேபலின் (Pregabalin) போதை மாத்திரைகளுடன் 70 வயதுடைய ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவரை மிதிகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது அதிகாரப் பூர்வ அட்டையைப் பயன்படுத்தி மருந்தகங்களில் மாத்திரைகளைக் கொள்வனவு செய்து எல்பிட்டிய பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
