அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடங்காதிருந்தால் ஈரான் சில வாரங்களில் அணுஆயுதத்தைப் பெற்று பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தலால் அமெரிக்க நகரங்களான லாஸ் ஏஞ்சலஸ், சான் டியேகோ தாக்கப்படவிருந்ததாக அவர் கூறிய கருத்துகளுக்கு அமெரிக்க இருகட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
