உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்த விடயத்தை திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார்.
