தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் அவரது புதல்வரின் நடிப்பிலும்
இசைக் குடும்பத்தில் பிறந்து தாயகத்தில் கலையில் தீவிரமாக செயல்பட்டு வரும் தனபால் பூவன் மதீசன் அவர்களின் இசையிலும் மற்றும் பல
கலைஞர்களின் இணைவிலும்
ஒக்டோபர் 2 திகதி உலகெங்கும் வெளியாகும் நம்மவர்கள் முழு நீள திரைப்படமான “போராட்டம்”
வெற்றிச் சாதனை படைக்க எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை 27.09.26 பிரான்ஸில் பொபினி திரையரங்கில் போராட்டம் திரைப்படம் சிறப்பு திரையிடல் செய்யப் படவுள்ளதை திரைப்பட ரசிகர்கள் ஆர்வலர்களுக்கு அறியத் தருகிறோம்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் அவர்கள் பிரான்ஸ் வந்த போது அவரது மூத்த படமான புத்தி கெட்ட மனிதர்கள் படத்திற்காக
பாரிஸ் பாலம் படைப்பக கலைஞர்கள் எளிமையாக பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தபோது எடுத்துக் கொள்ளப்பட்ட நிழற்படம்…
“உலகெங்கும் எம்மண்ணின் மணம் கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் பல் ஆற்றல்களை பேசட்டும்”
K.P.L
