யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் முச்சக்கரவண்டியும் அல்லைப்பிட்டி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
தீவுகள் ஆராயுங்கள்
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
