ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் இலங்கையிலிருந்து “அந்தோனி” எனும் எமது ஈழத்தமிழ் திரைப்படம் 2027ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது விழா பயணத்திற்கு தயாராகிறது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரால் இயக்கப்பட இலங்கைத் தமிழ்த் திரைப்படமான ‘அந்தோனி’ (Anthony), ‘சிறந்த சர்வதேசத் திரைப்பட’ப் (Best International Feature Film) பிரிவில் இலங்கையின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தெரிவு செய்யப்படுவதற்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
இலங்கையின் தேசிய ஆஸ்கார் தெரிவுக் குழு (NOSCSL) விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருவதோடு, இறுதியாகத் தெரிவு செய்யப்படும் திரைப்படத்தை 2026 செப்டம்பர் 28 அன்று அறிவிக்கவுள்ளது.
